Grey Matter

Eternal Sunshine Of A Spotless Mind

Archive for April 2007

ஒரு நாள் diary

with 5 comments

Note:Best viewed in Internet Explorer.

நான் தமிழில் எழுதும் முதல் வலை பதிவு.

காலை மணி 4:00…
அலறியது அலாரம் எழுந்திரு என்று
காலையில் காட்டங்காப்பி இல்லாமல் வேலை துவங்காது எனக்கு
காப்பி வைத்து பாதி குடித்து மீதி அவளுக்கு வைத்து
அடுப்பில் உலை வைத்து கொல்லை புறம் சென்றேன்
வாயில் உள்ள நுறையை கொப்பலித்து வந்தால்
சட்டியில் வெண்ணீரை கொப்பலித்துக்கொண்டிருந்தது
அடுத்து என்ன அரிசி தான்
அரிசியை உலையில் போட்டு
ஆற்றங்க்கரைக்கு ஒய்யாராமாய் சென்றேன்.
குளித்து முடித்து வந்ததும் சாதம் வடிக்க வேண்டியது தான்

மணி 5.30…

இன்று என்ன சமையல்
கத்திரிக்காய்– அவளுக்கு பிடிக்காது
வேண்டக்காய்–எனக்கு பிடிக்காது
ஆற்றங்கரையில் பிடிங்கிய வல்லாறையில் துவையல்
நேற்று கொல்லையில் பிறந்த தக்காழியில் ரசம்.
முடிவயாயிற்று.
வேண்டிய சாமான் எல்லாம் எடுத்து வைத்து
கோவிலுக்கு சென்று பூசை செய்து வருமுன் அவள் மீதி வேலை செய்திருப்பாள்

மணி 6.00…

அரக்க பறக்க ஆவியில் வேந்த இட்லியை முழுங்கி
அரை நடை அரை ஓட்டம் என bus ஸ்டண்ட் க்கு வந்தேன்
வழக்கம் போல் bus driver க்கு ஒரு சலாம்,conductor க்கும் ஒன்று.

மணி 7.00…

வழக்கம் போல் ‘time க்கு வந்துரார் இவரு’
என்று யாரோ பேசுவது காதில் விழுந்தது
பின்பு முழுவது ஊர் சுற்றும் வேலை.
எல்லாம் தெரிந்த முகம் தானே,
போகும் இடமெல்லாம் நலம் விசாரணை.
நடு நடுவே கடிதம் படித்து கட்டி நல் ஆசி வேறு பெறுகிறேன்,

மணி 3:00…

வீட்டிற்க்கு கிளம்ப வேண்டியது தான்
அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்,
மதியம் சாப்பிட்டு ஓறங்கி கொண்டிருப்பாள்,
அல்லது நேற்று பழைய பாத்திரகாரணிடம் வாங்கிய புத்தகம் படித்து கொண்டிருப்பாள்.

மணி 4:00…

மாலை காப்பி அருந்தி,
சற்றே தலை சாய்த்து 5:00 மணிக்கு கிளம்ப வேண்டும்

மணி 5:00…

ஆரம்பம் ஆயிற்று மாலை வேலை
ஆற்றங்கரை,கோவில்,பூசை
முடிவதற்குள் மணி 7 அரை

மணி 8.00…

இரவு அவளுக்கு என்று செய்த சாப்பாத்ியில் 3ஐ விழுங்கி
பட்டணத்தில் இருக்கும் மகன் phone பொதுவனா என்று காத்திருந்தேன்
ம்ஹூம்,இன்றும் அவன் போனே இல்லை.
எதாவது வேளையாக இருந்திருப்பான்.
2 ஏதம் பழத்தை வெட்டி அவளுக்கும்
எனக்கும் என பங்கிட்டாயிற்று.

மணி 9.00…

படுத்து ஓறங்கியாயிற்று
நித்திரையில் நிதர்சனம்
இங்கு சிவம் இல்லையேல் அந்த சக்தி இல்லை.
30 வருட உழைப்பினால் வற்றியது அவள் insulin,
சுருங்கியது ரத்த நாலங்கள்
அதனால் தான் இந்த சிவமே நளன் வடிவம் வேறு எடுத்தாயிற்று

அவனை போலவே நிற்காமல் ஓடுகிறது
ஒப்பற்ற போஸ்ட் மேன் என்று
அரிமா சங்கம் வழங்கிய அலாரம்
கடிகாரம்.

Written by subbu

April 9, 2007 at 7:32 am